ஒசாமா பின்லேடன் மகன் | நாட்டைவிட்டு வெளியேற பிரான்ஸ் அரசு உத்தரவு!

அக்டோபர் 10-

ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக அறியப்பட்ட ஒசாமா பின்லேடன், கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் கவனம் பெற்றார். இதையடுத்து அன்றுமுதல் அவர், அமெரிக்காவின் மிகப்பெரிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். என்றாலும், அவர் குறித்த இருப்பிடத்தைத் தேடி வந்த அமெரிக்கப் படையினர், இறுதியில் கடந்த 2011, மே 2ஆம் தேதி அவர் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், அவருடைய மகன் உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மறைந்த ஒசாமா பின்லேடனின் பல மகன்களில் உமர் பின்லேடனும் ஒருவர். சவூதியில் பிறந்த உமர் பின்லேடன், 19 வயதிலேயே தன் தந்தையைவிட்டுப் பிரிந்து ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், உமர் பின்லேடனை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரானஸ் அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS