இஸ்கந்தர் புத்தேரி,அக்டோபர் 10-
ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள SILC ( சில்க் ) தொழில்பேட்டையில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்கு ஆறு தீயணைப்பு நிலையங்கள் முழு வீச்சில் களம் இறங்கின.
காலை 11.33 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அந்த பெரிய தீச்சம்பவத்தை கட்டுப்படுத்துதற்கு ஆறு நிலையங்களின் வீரர்கள் கடுமையாக போராடியதாக கொமந்தர் முஹம்மது அனுவார் முகமட் ஹம்சா தெரிவித்தார்.
இஸ்கந்தர் புத்தேரி,/ லார்கின்,/ ஸ்குடாய்,/ பெகன் நெனாஸ், /பொன்டியன் பஹாரு மற்றும் செபனா கோவ்/ ஆகிய நிலையங்கள் இந்த தீயணைப்பில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.