பெண் ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்

கோலா திரங்கானு,அக்டோபர் 10-

திரெங்கானு, டுங்குனில் உள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை வாகனத்தினால் மோதி, மூவருக்கு மரணம் விளைவித்தது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் ஓட்டுநர் ஒருவருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய அந்த பெண் ஓட்டுநர், இன்று காலையில் கோலத்திரெங்கானு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூர் அமிரா பாத்திஹா ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

நேற்று இரவு 8 மணியளவில் திரெங்கானு, டுங்குன் – னில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மாது செலுத்தியதாக நம்பப்படும் SUV வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளோட்டிகளையும், பாதசாரிகளையும் மோதியது.

இதில் அந்தப் பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஒரு மாணவன் கடும் காயங்களுக்கு ஆளானான்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான அந்த மாது, மனோரீதியில் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS