பாசிர் மாஸ்,அக்டோபர் 10-
மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன் ஒருவன், கனரக வாகனம் ஒன்றை முந்திச்செல்லும் முயற்சியின் போது அந்த வாகனத்தில் மோதி, அரைபட்டு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் கிளந்தான், பாசிர் மாஸ் அருகில் டெண்டாங், கம்போங் கெர்டக் செரோங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
முஹம்மது சொலாஹுதீன் செமாடி என்ற அடையாளம் கூறப்பட்ட அந்த மாணவன் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காமா அசுரல் முகமது தெரிவித்தார்.