ஷா ஆலம், அக்டோபர் 10-
கடந்த திங்கட்கிழமை, கெடா, போகோக் சேனா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம் அடைந்ததற்கு, ரத்தத்தில் கிருமித் தொற்று காரணமாகும் என்று மலேசிய சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளது.
கடந்த செப்படம்பர் 25 ஆம் தேதி பிரம்படித் தண்டனைக்கு ஆளான அந்த கைதி, ஒன்பது நாட்களுக்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதியுற்று வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுல்தானா பாஹியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை இலாகா விளக்கம் அளித்துள்ளது.