ஷா ஆலம், அக்டோபர் 10-
இரண்டு தினங்களுக்கு முன்பு, பந்திங்கில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 4.30 மணியளவில் குடும்ப மாதுவை பாராங் முனையில் மடக்கி கொள்ளையடித்த இரண்டு முகமூடி கொள்ளையர்களை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
அந்த மாதுவை கட்டிப்போட்டப்பின்னர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டு சென்ற அந்த அந்த இரு நபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவர்கள் பிடிபட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் தெரிவித்தார்.
30 மற்றும் 21 வயதுடைய அந்த இரு கொள்ளையர்களையும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கோலலங்காட் போலீசார் கைது செய்து இருப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.