கோலாலம்பூர், அக்டோபர் 10-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் சமூகமாக நடைபெறுதை உறுதி செய்வதற்கு பாரிசான் நேஷனல் த லைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஆயத்த நிலை விளக்கமளிப்புக்கூட்டத்தை நடத்தியுள்ளதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலின் போது ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக வீ கா சியோங் குறிப்பிட்டார்.