கோலாலம்பூர், அக்டோபர்
இன்று அக்டேபார் 10 ஆம் தேதி வியாழக்கிழமை, பிரிட்டிஷ் மன்னர் Charles- ஸிமிருந்து மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தொலைபேசி அழைப்பை பெற்றது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் மன்னர், தம்முடன் தொலைபேசியில் கலந்துரையாடியதை மாமன்னர் தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.
நடைபெறவிருக்கும் 27 ஆவத காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் பிரிட்டிஷ் மன்னர் Charles தம்முடன் கலந்துரையாடியதாக சுல்தான் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.