கோலாலம்பூர், அக்டோபர்
கோலாலம்பூர், பிரிக்பில்ட்ஸ், லிட்டில் இந்தியா அருகில் உள்ள ஜாலான் தம்பிப்பிள்ளை- யில் கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்த அந்நிய நாட்டவர்களின் அனைத்து வியாபாரப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புக்கிட் பிந்தான் கிளை அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அமலாக்கத் தரப்பினர் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையானது, 1974 ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டட சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டதாகும் என்று கோாலம்பூர் மாநகர் மன்றம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சோதனையின் போது வியாபாரம் நடத்திய அந்நிய நாட்டவர்கள், அவ்விடத்திலிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
அந்நிய நாட்டவர்களுக்கு தங்களின் வர்த்தக லைசென்சுஸை பயன்படுத்தி, வர்த்தகம் செய்வதற்கு அனுமதி அளித்த உள்ளூர் வியாபாரிகளின் லைசென்ஸ் உரிய நடவடிக்கைக்காக மாநகர் மன்ற வர்த்தக லைசென்ஸ் பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.