மாமன்னர் புருணைக்கு பயணம் மேற்கொள்கிறார்

கோலாலம்பூர், அக்டோபர் 11-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நாளை மறுநாள் அக்டேபார் 13 ஆம் தேதி தொடங்கி, 15 ஆம் தேதி வரை புருணைக்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கும், புருணைக்கும் இடையில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் இந்த புருணை வருகை அமையவிருக்கிறது என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தவிர, மலாய் சுல்தான்களின் சமஸ்தானம் மற்றும் கலாச்சாரக்கூறுகளை மேலும் வளப்படுத்தும் நோக்கிலும் மாமன்னரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தில் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா-வும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS