துணை அமைச்சர் Lim Hui Ying மருத்துவ விடுப்பில் உள்ளார்

புத்ராஜெயா,அக்டோபர் 11-

துணை நிதி அமைச்சரும், தஞ்சங் நாடாளுமன்ற உறுப்பினருமான Lim Hui Ying மருத்தவ விடுப்பில் சென்றுள்ளார்.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அரசாங்க நிபுணத்துவ மருத்துவமனையில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து Lim Hui Ying, அக்டோபர் 8 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை மருத்துவ விடுபில் இருப்பார் என்று துணை நிதி அமைச்சரின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிஏபி – யின் பினாங்கு மாநில செயலாளருமான 61 வயது Lim Hui Ying, உடல் நலம் தேறுவதற்கு ஏதுவாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் விடுப்பில் இருப்பதாக அந்த அலுவலகம் மேலும் கூறியது.

WATCH OUR LATEST NEWS