இந்தியாவுக்கு கூடுதல் விமானச் சேவை / இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை

கோலாலம்பூர், அக்டோபர்

இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை தரும் நிலையில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் கூடுதல் விமானச் சேவை வழங்குவது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அனுமதி கிடைக்குமானால், சிக்கன கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, பாத்தேக் போன்ற விமான நிறுவனங்கள், கோலாலம்பூரிலிருந்து இந்திய நகரங்களுக்கு கூடுதல் விமானச் சேவையை வழங்குவதற்கு தயாராக உள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சிரம்பானில் தீபாவளி சந்தையையொட்டி மானியம் வழங்கம் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலா DAP பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தியாவிற்கான விமானச் சேவையை அதிகரிக்கும்படி உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்

WATCH OUR LATEST NEWS