இழப்பீடு வழங்கும்படி முன்னள் ஆசிரியருக்கு உத்தவு

ஷா ஆலம், அக்டோபர் 11-

தலையில் 5 தையல்கள் போடும் அளவிற்கு முன்னாள் மாணவன் ஒருவனை துடைப்பதால் தலையிலேயே அடித்து காயப்படுத்தியாக கூறப்படும் செலாயாங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 90 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

அந்த முன்னாள் மாணவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு அந்த முன்னாள் ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் டத்தோ ஹசிசா காசிம் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோர் 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செலாயாங் தொடக்கப்பள்ளியில் மலாய் பாடத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவன், எட்டு வயதாக இருக்கும் போது நடந்த இச்சசம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக அந்த மாணவனின் தந்தை இவ்வழக்கை பதிவு செய்தார்.

WATCH OUR LATEST NEWS