கோலாலம்பூர், அக்டோபர் 11-
தனது இரண்டு பிள்ளைகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் அந்த மாதுவினால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு பிள்ளைகளையும் போலீசார், அம்பாங் தமன் கோசாஸ் -ஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பாதுகாப்பாக போலீசார் மீட்டுள்ளனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு வயது ஒரு மாதம் நிரம்பிய கைக்குழந்தை மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் மீட்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
உடம்புபிடி சேவையை நடத்தி வந்ததாக கூறப்படும் அந்த மாது, இரண்டு சிறார்களையும் நீண்ட காலமாகவே அந்தவீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.