பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 11-
மூன்று பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கூறப்படும் சந்தேகப்பேர்வழி ஒருவரை வட கிள்ளான் மாவட்ட போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த சிறார்களை சம்பந்தப்பட்ட நபர், பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் தேடப்பட்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று பின்னிரவு 12.29 மணியளவில் போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளும் கெட்டுப்போன உணவை சாப்பிடட மறுத்ததாகவும், வீட்டு வேலைகளை செய்யவில்லை என்றும் கூறி அந்த பிள்ளைகளை சம்பந்தப்பட்ட ஆசாமி, இடைப்பட்டையினால் சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தியதாக அந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
தவிர தம்முடன் வாய்ப்புணர்ச்சியில் ஈடுபடுமாறு அந்த மூன்று பிள்ளைகளையும் சம்பந்தப்பட்ட நபர் கட்டாயப்படுத்தியதாக கூற்பபடுகிறது என்று விஜயராவ் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.