செரம்பன்,அக்டோபர் 11-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவுக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கிடங்கு பாதுகாவலர் ஒருவர் சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
37 வயதுடைய அந்த நபர், நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்நபர் கடந்த 2021 அம் ஆண்டு நீலாய், மந்தின், தாமான் அண்டலாஸில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.