தம்பின்,அக்டோபர் 11-
நெகிரி செம்பிலான் Tampin, gemas, batu 3, Heveaboard Industrial Park தொழில்பேட்டையின் தொழிற்சாலை வளாகத்தில் பழங்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Unexploded Ordnance வகையைச் சேர்ந்த அந்த வெடிகுண்டு கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிரிதீன் சரிமான்தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த Gemas- ஸை சேர்ந்த வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், அவ்விடத்தில் மூன்று பகுதிகளில் பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
35 செண்டிமீட்டர் நீளமுள்ள அந்தவெடிகுண்டு, காலை 11.45 மணியளவில் தம்பின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மூலம் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமிரிதீன் சரிமான் தெரிவித்தார்.