வழிப்பறி கொள்ளையன் பிடிபட்டான்

கோலாலம்பூர், அக்டோபர் 11-

கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கோலாலம்பூர் பங்சார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 78 வயது மூதாட்டியை கீழே தள்ளி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவன், பிடிபட்டுள்ளான் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

அந்த நபர், அதே தினத்தில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மற்றொரு வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளான் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று அம்பாங்கில் பிடிபட்டுள்ள அந்த கொள்ளையன், விசாரணைக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளான் என்று ஏசிபி கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.

திங்கட்கிழமை நடந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி, சிறிது தூரம் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் கடும் காயங்களுக்கு ஆளாகி, மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS