LEKAS நெடுஞ்சாலை நாளை மூடப்படும்

ஷா ஆலம், அக்டோபர் 11-

நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை HRB லேகாஸ் நெடுஞ்சாலை சைக்கிளோட்டம் 2024 க்கு வழிவிடும் வகையில் காஜாங்-சிரம்பான் லேகாஸ் நெடுஞ்சாலை மூடப்படும்.

இந்த நிகழ்வு நாளை இரவு 7.45 மணிக்கு தொடங்கும் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் உசோஃப் தெரிவித்துள்ளார்.

லேகாஸ் நெடுஞ்சாலையிலிருந்து சிரம்பானை நோக்கி மற்றும் Bandar Teknologi –யை நோக்கி அல்லது செமென்யிஹ் – யை நோக்கி லேகாஸ் நெடுஞ்சாலையுடன் இணைப்புக்கொண்டுள்ள சாலைகள் மூடப்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாகனமோட்டிகள், பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை கேட்டு நடப்பதுடன், சம்பந்தப்பட்ட சாலைகள் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

தவிர, அன்றைய தினம் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு பொதுமக்களை ஏசிபி நஸ்ரோன் அப்துல் உசோஃப் அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS