பயங்கரவாதத்தை தவிர்க்க கூட்டு உடன்பாடு

வியன்டியான்,அக்டோபர் 11-

தென்சீனாக் கடலில் நிலவி வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து அந்த அனைத்துலக கடற்பகுதியில் பயங்கரவாத செயல்கள் ஏற்படுவதை தவிர்க்க ஆசியானும், பெய்ஜிங்கும் ஒருமித்த கருத்துடன் இன்று இணக்கம் கண்டன.

தென்சீனாக் கடலில் எந்தகைய நெருக்கடி அல்லது பதற்ற நிலை ஏற்பட்டாலும் அதனை அரச தந்திர உறவு அல்லது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆசியான் உறுப்பு நாடுகளும் ஏகமனதாக உடன்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Lous தலைநகர் Vientiane- னில் நடைபெற்ற 44 மற்றும் 45 ஆசியார் உச்சநிலை மாநாட்டில் தென்சீனா கடல் விவகாரத்திற்கு ஆசியானுக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையில் இந்த உடன்பாடு காணப்பட்டதாக பிரதமர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS