கட்டடம் சரிந்து விழுந்தது, ஒருவர் மரணம்

மலாக்கா,அக்டோபர் 12-

நிர்மாணிப்பில் இருந்து வரும் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் மலாக்கா, பந்தர் ஹிலிர், ஜாலான் புக்கிட் சென்ஜுவாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் கட்டுமானத் தொழிலாளர்களான ஒரு வங்காளதேசப் பிரஜை மரணம் அடைந்த வேளையில், இரணடு பாகிஸ்தானியர்கள் படுகாயம் அடைந்தனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு 80 க்ககும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீர்ர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில்22 வயது Jidan என்ற அடையாளம் கூறப்பட்ட வங்காளதேச தொழிலாளரின் உடல் கடும் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS