மடானி அரசாங்கத்தில் சிறு வணிகர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் உதவிகள்

அக்டோபர் 14-

கடந்த சில தசாப்தங்களாக மலேசியப் பொருளாதாரத்திற்கு பங்களித்து வரும் துறைகளில் தொழில்முனைவோர் துறையும் ஒன்றாகும். குறிப்பாக, உலகமயமாக்கலின் சகாப்தத்தில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய வணிகமானது, பெரிய நிறுவனங்களையும் மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் (PMKS) சார்ந்துள்ளது. இந்த அடைவு நிலை, தற்போது நேர்மறையாக பார்க்கப்படுகிறது. காரணம், PMKS தொழில்துறையும், இத்தரப்பினருக்கு சமூகவியல் பொருளாதார ரீதியாக உதவுவதுடன், வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (PMKS) பலன் பெறுவதற்காக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் உதவிகள் மற்றும் நிதி உத்தரவாதங்களின் மொத்த மதிப்பு RM44 பில்லியன் வரை இருக்கின்றன.

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, பேங்க் சிம்பனன் நேஷனல் (பிஎஸ்என்) மற்றும் TEKUN போன்ற ஏஜென்சிகளின் கீழ் சிறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு RM2.4 பில்லியன் மொத்த நிதியுடன் சிறு கடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்என் மைக்ரோ கடன்களின் கீழ் மொத்தம் RM1.4 பில்லியன் வணிக மூலதனம், உபகரணங்கள் வாங்குதல், வளாகம் மற்றும் வியாபாரிகள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு சந்தைப்படுத்தல் ஆகியவற்றை வழங்குவதற்கு உதவி வருகிறது.

மக்கள் மற்றும் நாட்டின் வருமான வளர்ச்சியை அதிகரிப்பதில் வணிக திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்து, மடானி பொருளாதாரக் கட்டமைப்பின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (பிஎம்கேஎஸ்) மடானி அரசாங்கத்தின் பட்ஜெட், தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

பிரதமரின் கூற்றுப்படி நடப்பு நிதியில் மொத்தம் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடானது, பிரத்தியேகமாக இந்திய சமூகத்தினால் வழிநடத்தப்பட்டு வரும் வணிகங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தவிர அங்காடி வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்கள், முறைசாரா வணிகங்கள், வீட்டிலிருந்து நடத்தப்படும் வணிகங்கள் (வீட்டு அடிப்படையிலான வணிகம்) மற்றும் இதர வர்த்தகங்கள் போன்ற குழும அடிப்படையிலான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் துறைகளில் PMKS- ஸும் ஒன்றாகும்.

இந்தியப் பெண்களுக்கு புதிய வழமை, வளப்ப மேலாண்மை ஆகியவற்றை தரவல்ல “பெண் அல்லது PENN” எனப்படும் இந்தியப் பெண்கள் தொழில்துறையில் ஊக்கமளிக்கும் திட்டத்தின் மூலம் 2,367 இந்தியப் பெண்களுக்கு மொத்தம் RM16.7 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகை, கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறையின் (KUSKOP) துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனினால் “PENN” தொடக்கி வைக்கப்பட்டது முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த PENN திட்டத்திற்காக அமானா இக்தியார் மலேசியா (AIM) மொத்தம் RM50 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியப் பெண்கள் தங்கள் வியாபாரத்தை மூலதனமாக கொள்வதற்கும், வியாபாரத்தை பெருக்கிக்கொள்வதற்கும் கடனுதவியைப் பெறும் நோக்கில் இத்தொகை ஒதுக்கப்பட்டது. இந்த “PENN” திட்டத்திற்கு இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் இன்று வரையில் மகத்தான ஆதரவை நல்கி வருகின்றனர். இது நாடு முழுவதும் உள்ள 10,200 இந்தியப் பெண்களுக்கு தொடர்ந்து நன்மையளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பேராக் மாநிலம், மொத்தம் RM6.1 மில்லியன் கடனுதவியுடன் “PENN” திட்டத்தில் அதிக கடனுதவி பெற்ற மாநிலமாக பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து RM3.4 மில்லியனாக சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் RM2.6 மில்லியனாக நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்கள் பதிவாகியுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் அதிகமான இந்தியப் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது இந்தியப் பெண்களுக்கு குறிப்பாக, சிறு வணிகம் அல்லது சிறு வணிகத் துறையில் அவர்களை வளப்படுத்த வல்லதாகும்.

மேலும் மலேசியா மடானி கோட்பாட்டிற்கு ஏற்ப இந்த நாட்டில் உள்ள இந்தியப் பெண்களை முன்னேற்றவும், வளப்படுத்தவும், மேன்மைமிக்கவர்களாக உருவாக்கவும் இந்த “PENN” திட்டம் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிறது.

தவிர, தொழில் முனைவோர் துறையில் இளையோர்கள், அதிகளவில் ஈடுபடுவதையும் “PENN” திட்டம் ஊக்குவிக்கிறது. அரசாங்கத்தினால் குறிப்பாக, KUSKOP அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகள் மூலம் பல உதவிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்த உதவிகளை இந்தியப் பெண்களும் பெறும் நோக்கில் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

செல்வி சந்திரா ஐசெக்

ஒரு தொழில்முனைவோரான 57 வயது செல்வி சந்திரா ஐசெக் கூறுகையில், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து
தனது தொழிலை வீட்டிலிருந்து தொடங்கியதாக கூறினார். தொடக்கத்தில் தனது தோழிகள் மூலம் தையல் கலையைக் கற்றுக்கொண்டதன் விளைவாக சொந்தமாக தைத்த புடவைத் துணிகளை சிறிய அளவிலேயே விற்று வந்ததாக குறிப்பிடுகிறார்.

“இறைவன் அருளில், 2014 ஆம் ஆண்டு முதல் இங்கு தாமான் ரிஷாவில் ஒரு கடையைத் திறக்கும் அளவிற்கு வியாபாரம் பெருகியது. மலிவான விலையில் பல தேர்வுகளுக்குரிய நிறைய துணிகளை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தருவித்து, அவற்றை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதிலும் நான் தற்போது முனைப்பு காட்டி வருகிறேன்” என்று செல்வி கூறுகிறார்.

தாம் அடையப்பெற்ற இந்த வெற்றி, எளிதில் கிட்டிவிடவில்லை. மாறாக, பல்வேறு சவால்கள் மற்றும் பெரும் தியாகங்கள் மூலம் கிடைத்த வெற்றியாகும்.

” இந்த வர்த்தகப் பயணத்தில் நானும், குடும்பத்தினரும் சில நெருக்கடியையும் எதிர்நோக்கவிருந்தது. குறிப்பாக வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், துணி விநியோகிப்பாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் மூலதனத்தை தேட வேண்டியிருந்தது. இந்த தேடலின் பலனாக அமானா இக்தியார் மலேசியா (ஏஐஎம்) ஈப்போ கிளையில் கிடைக்கப்பெற்ற மூலதன நிதியுதவியுடன், எனது வணிகம் வெற்றிபெற பெரிதும் உதவியது.”

“ஆரம்பத்தில், நிதி மூலதனம் RM2,000 –க்கும் குறைவாகவே வழங்கப்பட்டது, ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொகை RM40,000- ஐ தாண்டியது” என்று தெரிவித்த செல்வி, அந்த மூலத்தனத்தின் மூலம் தமது டெய்லரிங் தொழில் செழிக்க வைக்க முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.

மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில், தனது தையல் தயாரிப்புகளுக்கு தனி சிறப்பு அம்சங்கள் உள்ளன என்றார் அவர். “எங்கள் தையல் வேலைகள் உயர் தரத்துடன் மிக நேர்த்தியாகவும், பொறுத்தமாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக உள்ளது” என்றும் செல்வி தெரிவித்தார்.

சக இந்திய தொழில்முனைவோர்களுக்காக “PENN” திட்டத்திற்கு அமானா இக்தியார் மலேசியா, RM50 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் செல்வி வரவேற்றார்.

“இந்த நாட்டில் உள்ள இந்தியப் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு இந்த நிதியை வழங்குவது மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறினார்.

சித்ரா ஜோசப் மகிழ்ச்சி

வீட்டு வேலியாகப் பயன்படுத்துவதற்கு இரும்புக்கம்பிகளை வெல்டிங் செய்யும் வேலையை ஒரு சிறிய அளவிலான வியாபாரமாக தமது கணவருடன் இணைந்து ஈடுபடத் தொடங்கிய 47 வயது சித்ரா ஜோசப்,
கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் கலைவேலைப்பாடுமிக்க வெல்டிங் இரும்புப் பொருட்களை பரவலாக விற்பனை செய்யும் அளவிற்கு தனது வணிகத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளார்.

தற்போது அவரின் LDT வெல்டிங் & இன்ஜினியரிங் எண்டர்பிரைஸ் நிறுவனம், வெளிப்புற மற்றும் உட்புற வீட்டு அலங்காரத்திற்கான இரும்பு வடிவமைப்பு கலைப்பொருட்களை உருவாக்குதல் மற்றும் நிறுவுதல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

பண்டார் ஸ்ரீ டாமன்சாராவை தளமாக கொண்டு அவர் தனது நிறுவனத்தை நிர்வகித்து வருவதாகவும், வெயில், மழையில் இருந்து பாதுகாக்கும் முழுமையான இரும்புப் பட்டறையை வைத்திருப்பதில் பெருமைப்படுவதாகவும் சித்ரா கூறினார்.

“இத்தகைய வசதியுடன், இரண்டு திறமையான வெல்டர்களைக் கொண்ட எங்கள் தொழிலாளர்கள், நல்ல தரமான வேலையை உருவாக்கித் தர முடிகிறது. மேலும் நாங்கள் தயாரித்த வழங்கக்கூடிய இரும்பு வேலிகள், கேட்டுகள், ஜன்னல் கதவுகள் போன்ற அனைத்து இரும்புப் பொருட்களுக்கும் நீடித்து தங்கவல்லதாகும் ” என்று அவர் குறிப்பிட்டார்.

எங்களின் இந்த வெற்றி, சாதாரணமானது அல்ல. வியர்வை சிந்தி, பெரும் தியாகத்தால் கிடைத்த வெற்றியாகும். இதற்காக வீட்டை விற்று நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதுடன் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீடித்த மூலதனக் கட்டுப்பாடுகள் மற்றும் மூலப்பொருட்களின் நிச்சயமற்ற விலை நிர்ணயம் ஆகியவை ஒரு நிலையற்ற சூழல், நிலைமையை மோசமாக்கியது.

ஒரு கட்டத்தில், இரும்பு விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, அடுத்த என்ன செய்வது என்று நினைக்கத் தோன்றியது. குறைந்த விலையில் விற்றால் நஷ்டம் ஏற்பட்டு விடும். அதிக விலைக்கு விற்றால் வாடிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கத் தோன்றியது.

2013 ஆம் ஆண்டு அமானா இக்தியார் மலேசியா, தொழில்முனைவோர் நண்பர் ஒருவர், தொடக்க மூலதனமாக 2 ஆயிரம் வெள்ளி பெறுவதற்கு நல்ல வேளையாக அமானா இக்தியார் மலேசியா, சுங்கைபூலோ கிளையை தனக்கு அறிமுகப்படுத்தியதாக சித்ரா தெரிவித்தார்.

அங்கு பெறப்பட்ட பணத்தை மூலதனமாகப் பயன்படுத்தி, நிறுவனத்தின் தயாரிப்புகளுகளுக்கு முக்கிய அங்கமான இரும்புகளை வாங்கினேன்.

“அப்போதிலிருந்து, மொத்தம் RM70,000 வரை 10 முறை அமானா இக்தியார் மலேசியாவிடமிருந்து நிதியுதவி பெற முடிந்தது. அமானா இக்தியார் மலேசியாவின் இதர தொழில்முனைவர் நண்பர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் சட்டப்பூர்வமாக வணிகத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் அமானா இக்தியார் மலேசியா நிறைய பயிற்சிகளை வழங்கியது” என்று சித்ரா கூறுகிறார்.

PENN திட்டத்தின் மூலம் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு தொழில் மேன்மைக்கு அமானா இக்தியார் மலேசியா வழங்கிய RM50 மில்லியன் சிறப்பு நிதியை AIM இன் தொழில்முனைவோர் நண்பர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சித்ரா எதிர்பார்க்கிறார்..

கடந்த ஏப்ரல் மாதம் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் 7,100 க்கும் மேற்பட்ட புதிய இந்திய தொழில்முனைவோர் நண்பர்கள் மற்றும் அமானா இக்தியார் மலேசியாவின் இக்தியார் நிதி திட்டத்திலிருந்து பலன் பெறக்கூடியவர்களின் எண்ணிக்கை, நடப்பில் உள்ள 3,100 தொழில்முனைவோர் நண்பர்கள் உட்பட 10,200 பேருக்கு நன்மையை அளிக்கும் என்று அறிவித்துள்ளார்.

“அந்த வகையில் இந்த நாட்டில் உள்ள இந்தியப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த “PENN” திட்டம் உதவும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்” என்று சிதரா கூறுகிறார்..

WATCH OUR LATEST NEWS