கோலாலம்பூர், அக்டோபர் 12-
கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியை நோக்கி செல்லும் கெந்திங் செம்பா சாலையின் 27.8 ஆவது கிலோ மீட்டரில் நீண்ட டிரெய்லர் லோரி ஒன்று நேற்று தடம் புரண்ட சம்பவத்தில் அதன் ஓட்டுநர் உயிரிழந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் ஆரிபின் முஹமட் நசீர் கூறினார்.
45 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், பகாங், லிப்பிஸைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்டது.
“ அந்த லோரி ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செலாயாங் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.
சாலையில் ஈரமான நிலப்பரப்பு காரணமாக லோரி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக நூர் அரிஃபின் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த லோரி, லிப்பிஸிலிருந்து கிள்ளானை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருதாக அவர் விவரித்தார்.