ஈப்போ , அக்டோபர் 12-
ஆறு வயது சிறுவன் ஒருவன் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த சிறுவனின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேரா,பாகன் செராய் -யில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் போலீசார் புகார் ஒன்றை பெற்றதாக கெரியன் மாவட்ட போலீஸ் தலைவர் ஜூனா யூசோஃப் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பாகன் செராய், கலும்பாங் தோட்டத்தில் ஒரு வீட்டில் அந்த சிறுவனின் 47 வயது தந்தையும், 33 வயது வளர்ப்புத் தாயாரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உடல் முழுக்க ரணமாக காணப்பட்ட நிலையில் அந்த சிறுவனை சித்ரவதை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பொருட்களையும், கேதும் போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.