மலாக்கா,அக்டோபர் 12-
கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியான வேளையில் மேலும் இருவர் கடுமையான காயங்களுக்கு ஆளான, மலாக்கா, பந்தர் ஹிலிர், ஜாலான் புக்கிட் சென்ஜுவாங் -கில் நிர்மாணிப்பில் இருந்து வரும் இடிந்து விழுந்த கட்டடம், கட்டப்படுவதற்கு எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை என்று மலாக்கா மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பின்னர் தாமும் தமது அதிகாரிகளும் அவ்விடத்திற்கு விரைந்த போது இது தெரியவந்துள்ளதாக மலாக்கா மாநகர் மன்றத்தின் தலைவர் டத்தோ ஷதன் ஓத்மான் குறிப்பிட்டார்.
தனியாருக்கு சொந்தமான அந்த நிறுவனம், சட்டவிரோதமாக அந்த கட்டடத்தை கட்டியதைத் தொடர்ந்து அப்பகுதியை மலாக்கா மாநகர் மன்றம் பறிமுதல் செய்து இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
இச்சம்பவத்தில் கட்டுமானத் தொழிலாளர்களான ஒரு வங்காளதேசப் பிரஜை மரணம் அடைந்த வேளையில், இரணடு பாகிஸ்தானியர்கள் படுகாயம் அடைந்தனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்துள்ளார்.