பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி

கோலாலம்பூர், அக்டோபர் 12-

இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஒன்று, இன்று மதியம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

பாஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மையப்பகுதியான KLCC-யின் As Syakirin பள்ளிவாசலில் தொடங்கிய இந்தப் பேரணி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வரை நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS