கோலாலம்பூர், அக்டோபர் 12-
பினாங்கில் தனியார் பள்ளி ஒன்றில் சீனநாட்டுக்கொடியை பறக்கவிட்டவர்கள், மலேசியப் பிரஜைகள் அல்ல என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் சம்பந்தப்பட்டுள்ள மாணவர்கள் சீனப்பிரஜைகள் ஆவர். அந்த செயலில் மலேசிய மாணவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுப்படுத்தினார்.
அது தனியார் பள்ளியாகும். அந்தப் பள்ளியில் பயிலும் சீன நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் விளக்கினார்.
அதேவேளையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மலேசியாவைச் சேர்ந்த சீன மாணவர்கள் என்று கூறப்படுவது உண்மையல்ல, அந்த தகவல், வேண்டுமென்றே கட்டவிழ்க்கப்பட்டுள்ள கதையாகும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.