பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-
நாட்டின் 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான மூன்றாவது மக்களைக்கூட்டத் தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி இன்று தொடங்குகிறது.
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை 35 நாட்களுக்கு மக்களவைக்கூட்டம் நடைபெறுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது மக்களவைக்கூட்டத் தொடர், வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாக்கல் செய்யவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இக்கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.