தவாவ் , அக்டோபர் 13-
சபா, தவாவ்-வில் எல்லைக்கடந்த குற்றத்தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது 14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சபாவில் பிரத்தியேக பாதுகாப்பு மண்டலப் பிரிவான ESSCOM ( எஸ்கோம் ) – மின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் கீழ் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஆறு பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்.
30 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண மாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக எஸ்கோமின் கோமாண்டர் டத்தோ விக்டர் சான்ஜோஸ் தெரிவித்தார்.