பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-
மலாக்காவில் ஜாலான் முன்ஷி அப்துல்லா – வில் செயல்பட்டு வந்த பரபல போபியா உணவகத்தை 14 நாட்களுக்கு மூடும்படி மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உணவகத்தின் பின்புறம் போபியா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வைக்கப்படும் இடம் எலிகளின் கூடாரமாக அவற்றின் எச்சங்கள் ஆங்காங்கு கிடப்பது மாநில சுகாதார அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உணவகம் சுத்தம் செய்யப்படும் வரை அடுத்த 14 நாட்களுக்கு இழுத்து மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா சுகாதார, மனித வள மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ங்வே ஹீ செம் தெரிவித்துள்ளார்.