மலாக்கா,அக்டோபர் 12-
கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியான வேளையில் மேலும் இருவர் கடும் ஆளான, மலாக்கா, பந்தர் ஹிலிர், ஜாலான் புக்கிட் சென்ஜுவாங் -கில் நிர்மாணிப்பில் இருந்து வரும் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் அந்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த நபரை தேடும் பணியில் அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த கட்டட உரிமையாளரும், அதன் குத்தகையாளரும் காணவில்லை. அவர்கள் தலைமறைவாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அவர்களை தேடும் பணியை அமலாக்கத்துறையினர் தீவிரமாக முடுக்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரைஸ் யாசின் தெரிவித்துள்ளார்.