பொண்டியன்,அக்டோபர் 12-
நாட்டில் போதுமான அளவிற்கு உள்ளூர் அரிசி விநியோகம் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் கெடாவிலும், பெர்லிஸிலும் அடை மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும் உள்ளூர் அரிசி விநியோகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா உட்பட சில நாடுகளுடன் அரிசி இறக்குமதி தொடர்பிலான ஒப்பந்தம் இன்னமும் நடப்பில் இருப்பதால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற முகமட் சாபு விளக்கினார்.