ஜிங்காங் ஷான் 999 பினாங்கு துறைமுகத்தில் அணைந்துள்ளது

சிங்கப்பூர்,அக்டோபர் 12-

சீனாவின் பயிற்சிக்குரிய கப்பலான ஜிங்காங் ஷான் 999, பினாங்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 210 மீட்டர் நீளம் கொண்ட அந்தக் கப்பல், 239 பேருடன் மர்மமான முறையில் காணாமல் போன, மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான MH 370 விமானத்தை, தேடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

2017 மார்ச் 8 ஆம் தேதி அந்த மலேசிய விமானம் காணாமல் போன மறுநாளே அதனை தேடுவதற்கு சீனாவின் ஜான்ஜியாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட முதல் கப்பல் ஜிங்காங் ஷான் 999ஆகும் என்று பினாங்கு மாநில பொருளாதார மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் Wong Hon Wai தெரிவித்தார்.

MH 370 விமானத்தை தேடுவதில் ஜிங்காங் ஷான் 999 கப்பல், தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா, சுமத்திரா, ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் சுமார் 31 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான பரப்பளவில் பயணம் மேற்கொண்டது என்று வோங் குறிப்பிட்டார்.

கடல் பயிற்சி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் சீனாவில் கடற்படை பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் அந்தக் கப்பல், பினாங்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வோங் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS