கோலாலம்பூர், அக்டோபர் 12-
சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ்-ஸின் ஆறு உறுப்பினர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அந்த ஆறு உறுப்பினர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.
கோத்தா திங்கியில் செயல்பட்ட ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் கிளை அலுவலத்தின் சமூக இல்லத்தில் நிகழ்ந்த பாலியல் பலாக்காரம் தொடர்பில் அந்த ஆறு பேரும் குற்றஞ்சாட்டப்படுவர் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.