நீலைய்,அக்டோபர் 12-
வேகக்கட்டுப்பாட்டை இழந்த செம்பனை எண்ணெய் கொல்கலன் லோரி ஒன்று சாலைத்தடுப்பை மோதி தடம் புரண்டு தீப்பிடித்துக்கொண்டது.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் ELITE நெடுஞ்சாலையை இணைக்கும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 44.6 ஆவது கிலோ மீட்டரில் நீலாய் அருகில் நிகழ்ந்தது.
முன்னதாக, அந்த கொல்கலன் லோரி தடம் புரள்வதற்கு முன்னதாக ஒரு காரை மோதித்தள்ளியப்பின்னர் சறுக்கிக்கொண்டு, சாலைத் தடுப்பை மோதியதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 21 வயது ஆடவர் காயத்திற்கு ஆளாகி, சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.