லங்காவி, அக்டோபர்
மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் கீழே விழுந்து காயமுற்றார்.
லங்காவியில் இன்று தொடங்கிய Ironman Malaysia போட்டியில் பங்கு கொண்டிருந்த போது சையத் சாதிக் பயணம் செய்த சைக்கிள் மீது மரக்கிளை விழுந்தது. இதில் சைக்கிளுடன் கீழே விழுந்த 31 வயது சையத் சாதிக் இரு கைகளிலும் சீராய்ப்புக்காயங்களுக்கு ஆளானார்.
எனினும் கடும் மழையிலும் அந்தப் போட்டியிலிருந்து பின்வாங்காமல் சையத் சாதிக் தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.