நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நீக்கம் மலேசியாவில் டிக் டாக் சேவையில் பாதிப்பு இல்லை

கோலாலம்பூர், அக்டோபர் 12-

மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து இருக்கும் டிக் டாக் நிறுவனத்தின் நடவடிக்கையினால் இந்நாட்டில் டிக் டாக் சேவையில் பாதிப்பு இராது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள டிக் டாக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பில் அந்த பன்னாட்டு நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வரும் தொழிலாளர்களில் 481 பேர் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதேவேளையில் மூவாயிரத்து 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருவதால் மலேசியாவில் டிக் டாக் சேவைத் தரத்தில் எந்தவொரு பாதிப்பின்றி தொடர்ந்து செயல்படும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்து இருப்பதாக ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

உலகளாவிய நிலையில் டிக் டாக் நிறுவனம் தனது பணியாளர்கள பணி நீக்கம் செய்து வரும் நிலையில், தற்போது மலேசியாவிலும் அதன் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் இந்த பணி நீக்கம் குறித்து எடுக்கப்பட்ட முடிவு,
டிக் டாக்கின் உள்ளடக்க மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS