பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 13-
அண்மையில் இரண்டு சீன கடற்படை கப்பல்கள் பினாங்கு கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த விவகாரம் தொடர்பாக பேசி வரும் அரசியல் தரப்பினரை டத்தோ ஶ்ரீ அன்வார் கடுமையாக சாடியுள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் சீன கடற்படை கப்பல்கள் நிற்பது காலந்தோறும் வழக்கில் இருக்கும் நடப்பாகும். மேலும் இஸ்ரேல் கடற்படை கப்பலை தவிர்த்து இதர நாடுகளான சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தோனேசிய மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கப்பல்கள் மலேசிய துறைமுகத்தில் நிற்பது ஒன்று புதியது அல்ல அல்ல என நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
அரசியல் நோக்கத்திற்காக சிலர், சீன கடற்படை கப்பல்கள் பினாங்கைத் தாக்கப்போவதாக கூறிவரும் வதந்திகளைக் நாட்டின் பிரதமர் கடுமையாக சாடி உள்ளார்.