கோலாலம்பூர், அக்டோபர் 13-
மலேசிய இந்திய கூட்டுறவுக் கழகங்களின் மாநாடு இன்று
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் Menara Kembar Bank Rakyat மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்தியர்களுக்காக இம்மாநாட்டினை அரசு நடத்தியிருப்பதாகத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை
துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

நாட்டில், இந்தியர்களுக்காக 455 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே இருக்கின்றன. தற்போது 200க்கும் மேற்பட்ட இந்தியக் கூட்டுறவுக் கழகங்களை ஒருங்கிணைத்திருக்கும் நிலையில் 30,000 ரிங்கிட் வரைக்குமான மானியத்திற்கு அக்கழகங்கள்
விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தகுதியான கூட்டுறவுக் கழகங்களுக்கு, தகுதிக்கேற்ப அந்த நிதி
வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் சிறந்த கூட்டுறவு கழகங்களின் முதல் 5 இடத்தில் இருக்கும் ஒரே இந்திய கூட்டுறவு கழகம் என்றால், அது தேசிய நில நிதி கூட்டுறவுக் கழகம்தான் என ரமணன் குறிப்பிட்டார்.
கூட்டுறவுக் கழகங்கள் தத்தம் பொருளாதார
நடவடிக்கைகளை வலுப்படுத்த அவற்றுக்கு
உதவும் நோக்கில் மானியம்
வழங்கப்படுவதாகக் கூறிய அவர்,
தமது அமைச்சின் மூலம் இந்திய சமூகத்துக்கு தேவையானதைச் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் 70 லட்சம்
ரிங்கிட் ஒதுக்கீட்டில் சுழல் முதலீட்டு நிதியம் குறித்தும் அவர் விவரித்தார்.