ஈப்போ , அக்டோபர் 14-
ஈப்போவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் 12 வயது மாணவி, ஒருவரை மானபங்கம் செய்ததாக நம்பப்படும் பள்ளியின் துணை தலைமையாசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அந்த மாணவியின் தாயார் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 37 வயதுடைய அந்த ஆசிரியர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் Datuk Azizi mat Aris தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்த ஆறாம் ஆண்டு மாணவியை கட்டித்தழுவி முத்தமிட்டதுடன், அருவருக்கத்தக்க சில புகைப்படங்களை வழங்கியதாக அந்த அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் அப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த அந்த ஆசிரியர் 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.