சிலாங்கூர்,அக்டோபர் 14-
வரும் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை
வரை சிலாங்கூரில் கடலோரப்பகுதிகளில் கடல் பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் கடலில் நீர் மட்டம் 5.8 மீட்டர் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக்
கருத்தில் கொண்டு கவனமுடன் இருக்கும்படி பொது மக்கள் மற்றும்
சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம்
நினைவுறுத்தியுள்ளது.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் தயார் செய்யப்பட்டுள்ள தற்காலிக நிவாரண
மையங்களுக்கு செல்லும்படி பிறப்பிக்கும்படி இடப்படும் உத்தரவுகளைப்
பின்பற்றுங்கள் என அது ஆலோசனை கூறியது.