பினாங்கு ,அக்டோபர் 14-
கூலிம், Hi Tech Park-கில் உள்ள சீடிம் ஆற்றில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதுடை தினேஸ்வரன் பரமேஸ்பரன் என்பவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தீயணைப்புப் படை துணை அதிகாரி அஸ்மிர் ஹாசான் தெரிவித்தார்.
நேற்று மாலை 5.41 மணி அளவில் சீடிம் ஆற்றில் ஒரு இளைஞன் மூழ்கிவிட்டத்தாக தீயணைப்புப் படையினர் தகவலைப் பெற்றனர். அத்தகவலை த் தொடர்ந்து கூலிம் Hi Tech Park-கிலிருந்து 9 தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சீடிம் ஆற்றில் அந்த ஆடவரை தேடும் பணியில் ஈடுப்பட்டத்தாக அஸ்மிர் கூறினார்.

அந்த இந்திய ஆடவர், பினாங்கிலிருந்து 16 நண்பர்களுடன் சீடிம் ஆற்றில் குளிக்க வந்துள்ளனர் .ஆற்றின் நீர் ஓட்டம் அதிக அளவில் இருந்ததால் அவ்வாடவர் மூழ்கி மாயமாகியிருப்பத்தாக அஸ்மிர் குறிப்பிட்டார்.

தினேஸ்வரனை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

செய்தி& படம்: ஹேமா எம்.எஸ். மணியம்