500 பேருக்கு தீபாவளி அன்பளிப்புக்கூடைகள், டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் குழுவினர் வழங்கினர்

பினாங்கு , அக்டோபர் 14-

பினாங்கில் டத்தோஸ்ரீ R. அருணாசலம் மற்றும் அவர்தம் நண்பர்கள் 43 ஆவது ஆண்டாக வசதிகுறைந்த மற்றும் பேறு குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புக்கூடைகளை வழங்கும் நிகழ்வை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெகு சிறப்பாக நடத்தினர்..

இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் என சுமார் 500 பேருக்கு தலா 250 வெள்ளி பெறுமானமுள்ள உணவு பொட்டலக் கூடை மற்றும் தலா 50 வெள்ளி விழா கால ரொக்க அன்பளிப்பை வழங்கி, உதவிக் கரம் நீட்டப்பட்டது..

இந்த அன்பளிப்பு நிகழ்வு சிறப்பு பிரமுகர்களின் வருகையோடு மிக கோலாகலமாக தொடங்கியது

இந்நிகழ்விற்கு ஜெலுத்தோங் எம்.பி.யும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான RSN ராயர், வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கெல்வின் குமரன், டான்ஸ்ரீ யூசோப் லத்திப், டான்ஸ்ரீ ரமேஷ், டத்தோ J. தினகரன் மற்றும் Dato Chua Sui Hau உப்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்னர்.

WATCH OUR LATEST NEWS