ஒரு தம்பதியரை பிடிப்பதற்கு இண்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 14-

7 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 20 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து நிர்வாணக்கோலத்துடன் இறந்து கிடந்த முன்னாள் டச்சு மாடல் அழகி Ivana Smit மரணம் தொடர்பில் ஓர் அமெரிக்க – Kazakhstan தம்பதியரைப் பிடிப்பதற்கு போலீசார், இண்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

இத்தகவலை 18 வயதுடைய அந்த மாடல் அழகியின் குடும்பத்தின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் SN நாயர் தெரிவித்தார்.

Alex Johnson மற்றும் Luna Almaz என்ற தம்பதியரை பிடிப்பதற்கு இண்டர்போல் போலீசாருக்கு நீல நிற நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த தம்பதியர், போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள மியாமியில் குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த அன்று அந்த தம்பதியர், அந்த மாடல் அழகியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தம்பதியரை பிடிப்பது மூலம் அந்த இளம் பெண்ணின் மரணத்திற்கு தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS