கோலாலம்பூர், அக்டோபர் 14-
தமது பூர்வீகம் இந்தியா, கேரளா என்றும், / தமது உண்மையானப் பெயர் இஸ்கந்தர் குட்டி என்றும் கூறி, / தாம் ஒரு உண்மையான மலாய்க்கார முஸ்லிம் அல்லாதவரைப் போல் சித்திரித்து, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் வெளியிட்ட பகிரங்க அறிக்கையினால் மலாய்க்காரர்கள் மத்தியில் தாம் கொண்டிருந்த பெரும் செல்வாக்கை இழக்க நேரிட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தம்மை இஸ்கந்தார் குட்டி என்று ஜாஹிட் அழைத்ததன் காரணமாக தாம் உண்மையான மலாய்கார முஸ்லிம் அல்ல என்பதைப் போல் மக்கள் மத்தியில் தோற்றம் ஏற்பட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே மலாய்க்காரர்கள் மத்தியில் தாம் கொண்டிருந்த செல்வாக்கை இழக்க நேரிட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
துன் மகாதீரின் உண்மையான பெயர் இஸ்கந்தார் குட்டி என்றும் அவரின் மூதாதையர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் தம்மை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக துன் மகாதீர் தொடுத்துள்ள மாநநஷ்ட வழக்கு விசாரணை நீதித்துறை ஆணையர் Gan Techiong முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமது வழக்கறிஞரின் கேள்விகளுக்கு துன் மகாதீர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
தமக்கு எதிராக ஜாஹிட் வெளியிட்ட அறிவிப்பு தாம் ஓர் உண்மையான மலாக்கார முஸ்லீம் அல்லாதவரைப் போல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் துன் மகாதீர் வாதிட்டார்.