புத்ரா ஜெயா அக் 14
மக்களின் ஒற்றுமைக்கு விளையாட்டு ஒரு தளமாக அமைவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மதம், இனம் மற்றும் சமய பாகுபாடின்றி விளையாட்டு கலாச்சாரம் மக்களை ஒன்றிணைப்பதாக தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் விளையாட்டு தின நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.


மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதில் விளையாட்டு முக்கிய பங்காற்றி வருகிறது.
ஆகையால் மக்களிடையே விளையாட்டு கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தேசிய விளையாட்டு தினம் நடத்தப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் மலேசிய மடானி ஒற்றுமை திட்டத்தின் கீழ் விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை பேண விளையாட்டு மிக முக்கியமான ஒன்று என அவர் சொன்னார்.கடந்த 2011-ல் 44.5 விழுக்காடாக இருந்த மக்களில் உடல் பருமன் அளவு 2023-ல் 54.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலை கண்காணிக்கப்படாவிட்டால், நிலைமை மோசமடையும் என அவர் சொன்னார்.இந்த நிலையில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமது முழு ஆதரவு உண்டு என்றார் அவர்.
இந்த அமைச்சை சேர்ந்த அனைவரும் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கு பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

