கங்கார் ,அக்டோபர் 15-
பெர்லிஸில் உள்ள பாடாங் பெசார் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 12 மியான்மார் நாட்டினரைக் கைது செய்துள்ளதாகக் கங்கார் மாவட்டக் காவல் ஆணையர் முகமது ஷோக்ரி அப்துல்லா தெரிவித்தார்.
தாய்லாந்து எல்லைப் பகுதி வாயிலாக மலேசியாவுக்குள் நுழையும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 32 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் தடுப்பூக் காவலில் வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.