ஜாசின்,அக்டோபர் 15-
மலாக்காவில் பெய்து வரும் கனமழையால் ஜாசின் பகுதியில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படை தெரிவித்துள்ளது.
ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஸ்.எம்.கே டாங் அனும், எஸ்.கே.செர்காம் தரத், எஸ்.கே.டெடாங், எஸ்.கே.மெர்லிமாவ், எஸ்.எம்.கே.டத்தோ அப்துல் ரஹ்மான் யாக்கோப் என 5 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையிலிருந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.