கோலாலம்பூர், அக்டோபர்
இன்று காலையில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் அருகில் உள்ள உலு கிள்ளான், Batu Lapan-னில் உள்ள பாலர் பள்ளியில் 21 மாணவர்கள், ஒரு மீட்டர் உயரம் வரை உயர்ந்து விட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.
எனினும் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர், அனைத்து மாணவ, மாணவிகளையும் காப்பாற்றி, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு,மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் காலை 10.28 மணிக்கு அவசர அழைப்பை தீயணைப்பு, மீட்புப்படையினர் பெற்றதைத் தொடர்ந்து அறுவர் அடங்கிய வீரர்கள் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
திடீர் வெள்ளத்தில் சிக்கிய அணைத்து மாணவர்களும் ஐந்தே நிமிடத்தில் மீட்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.