அம்பாங் ஜெயா,அக்டோபர் 15-
இன்று காலையில் பெய்த கனத்த மழையில் உலு கிள்ளான், ஜாலான் இ6 தமன் மெலாவதி-யின் மலையடிவார குடியிருப்புப்பகுதி அருகாமையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 20 குடும்பங்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைரும் தற்காலிகமாக தமன் மெலாவதி, ஜாலான் E6- இல் உள்ள பொது மண்டபத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த வீடுகள் வீற்றிருக்கும் மலையடிவாரப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது ஒரு தற்காலிக நடவடிடக்கைதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் அ திர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.